< Back
மாநில செய்திகள்
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா?   மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோப்பு படம்

மாநில செய்திகள்

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தினத்தந்தி
|
5 Aug 2024 8:31 AM IST

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளிலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்