< Back
மாநில செய்திகள்
உதயநிதிக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?- வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

உதயநிதிக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?- வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
29 Sept 2024 2:35 PM IST

முதல்-அமைச்சரின் மகன் என்ற ஒரு காரணத்தை தவிர உதயநிதிக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை,

கோவையில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளது குறித்து இதயத்தை பலப்படுத்தி விட்டு வந்த பின் வாழ்த்து கூறுகிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்ற ஒரு காரணத்தை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?. உதயநிதியின் பணியை வைத்து மக்களே முடிவு செய்வார்கள். ஜாமீன் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி நேர்மையான அரசை கொடுக்க முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்