< Back
மாநில செய்திகள்
விருதுநகர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட தயாரா?
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட தயாரா?

தினத்தந்தி
|
28 Sept 2023 2:31 AM IST

விருதுநகர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பினார்.

சிவகாசி,

சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரை மனதோடு மத்திய அரசு அந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், சரவெடி தயாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு சிவகாசிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பதை இந்த தீர்ப்பின் மூலம் தெரிகிறது. மோடி ஆட்சியில் இருக்கும் வரை பட்டாசு தொழிலுக்கான பிரச்சினைகள் தொடரும். இந்த தீர்ப்பினால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் 3-வது அணி அமைத்தால் அது நோட்டாவிற்கு சாதகமாக இருக்கும். விருதுநகர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட தயாரா?.

இ்வ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர், அண்ணாமலை, போட்டி, தயார்

மேலும் செய்திகள்