< Back
மாநில செய்திகள்
100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்... முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மாநில செய்திகள்

"100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்..." முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தினத்தந்தி
|
12 Sept 2022 12:59 PM IST

தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மின்சார கட்டண உயர்வு குறித்து கூறும்போது, மின்சாரக்கட்டண உயர்வு வரலாறு காணத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

மொத்தமாக ஏறத்தாழ 52 சதவீதம் வரையில் மின்கட்டனம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், வியாபாரிகள், தொழில் முதலீட்டாளர்கள், அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது.

இனி வருடத்திற்கு ஒருமுறை 6 சதவீதம் உயர்த்தப்படும் என்பதும் சூட்சகமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அரசு சாமானிய மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்