< Back
மாநில செய்திகள்
இருமுடி, தைப்பூச திருவிழா: 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
மாநில செய்திகள்

இருமுடி, தைப்பூச திருவிழா: 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

தினத்தந்தி
|
28 Nov 2023 4:06 AM IST

இருமுடி கட்டி செல்லுதல் மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி, பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

இருமுடி கட்டி செல்லுதல் மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி, பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 25-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பாண்டியன், பொதிகை, நாகர்கோவில், வைகை, சேலம், கொல்லம், உழவன், சிலம்பு, ராமேசுவரம், மன்னார்குடி, புதுச்சேரி உள்பட எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அந்தியோதயா, ஹம்சபார், லோக்மான்ய திலக், சம்பர்க் கிராந்தி உள்பட வெளிமாநில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என மொத்தம் 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் நின்று செல்லும்.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்