< Back
மாநில செய்திகள்
புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்

தினத்தந்தி
|
25 Aug 2023 6:45 PM GMT

புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன வாய்க்கால்

கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடியில் தெற்கு சேத்தி பாசன வாய்க்கால் உள்ளது. கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீரை இந்த பாசன வாய்க்கால் மூலம் கொண்டு சென்று நெல், உளுந்து, பயறு போன்ற பயிர்களை அந்த பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டிலும் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் சுமார் 300 ஏக்கரில் வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பாசன வாய்க்கால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புதர்மண்டி செடிகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், அடர்ந்த காடுகள் ஆக்கிரமித்த நிலையில் காணப்படுகிறது. பாசன வாய்க்கால் ஒன்று அந்த இடத்தில் இருப்பது தெரியாத அளவிற்கு காடுகளாய் காட்சி அளிக்கிறது. புதர் மண்டி காணப்படுவதால் பாசன வாய்க்காலில் முறையான அளவில் தண்ணீர் சென்று அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு சென்றடைவது இல்லை.

தூர்வார வேண்டும்

இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட வாடிய பயிர்களை காப்பாற்ற வயல்களில் பம்புசெட் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே புதர் மண்டி கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடு்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்