< Back
மாநில செய்திகள்
கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு..? விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
மாநில செய்திகள்

கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு..? விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தினத்தந்தி
|
2 Jan 2023 1:23 PM IST

கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு

மதுரை,

கடந்த 2019 - 20 ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதிமுக ஆட்சியில் அவசர கதியில் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரியும் நெல்லையை சேர்ந்த சமுத்திரம் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் 2019-20 ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பதை ஆராய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தனர்.

அதே போல் முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்