< Back
மாநில செய்திகள்
கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு
விழுப்புரம்
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு

தினத்தந்தி
|
19 Nov 2022 12:05 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.

புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பூவைஆறு, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, இளைஞரணி அமைப்பாளர் கோபி உள்ளிட்டோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 2016 முதல் 2020 வரை பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக மாணவ, மாணவிகளிடம் வங்கி கணக்கு புத்தக நகலை கல்லூரி நிர்வாகம் பெற்று ஒரு சில பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் முறைகேடு செய்துள்ளனர். எனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு கல்வி உதவித்தொகை பெறாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்