விபத்தின் போது 110 கி.மீ வேகத்தில் பறந்த இர்ஃபானின் சொகுசு கார் - காருக்குள்ளே இருந்த இர்பான்
|பிரபல யூடியூபர் இர்பானின் கார் மோதிய விபத்தின் போது அவரும் அவரது மனைவியும் காருக்குள்ளே இருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் விபத்து;
செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகரில் கடந்த 25 ம் தேதி வியழன்கிழமை இரவு 9.30 மணியளவில் பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்து நடந்த காரை இர்பானின் உறவினரான அசாரூதின் என்பவர் ஓட்டி வந்துள்ளார் அவரை போலிசார் கைது செய்து விசாரனை நடத்தினர். விசாரணையில் விபத்து நடந்த போது இர்பான் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் காரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.விபத்து நடந்து அன்று இர்பான் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது மனைவியின் சொந்த ஊரான தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி வந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த போது அவரது கார் 110கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இர்பான் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில் அவரது உறவினரான அசாரூதின் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.