< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை - 7 பேர் கைது
|25 May 2023 8:55 PM IST
ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை-லக்னோ அணிகளுக்கு இடையே நேற்று ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில் சேப்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 23 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.