< Back
மாநில செய்திகள்
ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரெயிலில் பயணிக்க ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்க வேண்டும்- மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்
மாநில செய்திகள்

ஐபிஎல் போட்டி: மெட்ரோ ரெயிலில் பயணிக்க ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்க வேண்டும்- மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

தினத்தந்தி
|
22 May 2023 1:24 PM GMT

சென்னையில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு, மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஒத்துழைப்பு அளித்து வந்தது.

சென்னை,

சென்னையில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு, மெட்ரோ ரெயில் நிறுவனமும் ஒத்துழைப்பு அளித்து வந்தது. அதன்படி, கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளில் இடம்பெற்றிருக்கும் கியூ.ஆர். கோட்டை பயன்படுத்தி, (போட்டி நடைபெறும் நாட்களில் மட்டும்) மெட்ரோ ரெயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை பயண சீட்டாக பயன்படுத்த முடியாது என்று மெட்ரோ ரெயில் நிறுவனன் அறிவித்துள்ளது. அதன்படி 23, 24-ந்தேதிகளில் (இன்றும், நாளையும்) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க வரும் ரசிகர்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்