< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு
|15 Jun 2022 7:12 AM IST
சென்னை ஓட்டேரி அருகே அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு போனதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டேரி அடுத்த ஜோதி நகரில் பவானி எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மூடிவிட்டு நேற்று காலை திறக்க கோவில் ஊழியர் வந்துள்ளார்.
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவில்களில் இருந்த 65 கிலோ கொண்ட ஐம்பொன் சிலை, 4 கிராம் தங்கம், மற்றும் ரூ.28 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.