< Back
மாநில செய்திகள்
அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

வேதாரண்யத்தில் அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வட்ட நுகர்வோர் அமைப்பும், ஆறுகாட்டுத்துறை உயர்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் இணைந்து அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு தலைமை ஆசிரியர் கலைக்கோவன் தலைமை தாங்கினார். இதில் அயோடின் கலந்த உப்பின் அவசியம் மற்றும் அதன் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் பற்றி வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் வீரசுந்தரம், அமைப்பின் செயலர் செல்வராசு ஆகியோர் பேசினர். முகாமில் அரிமா வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற அமைப்பாளர் செல்லப்பா நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்