< Back
மாநில செய்திகள்
வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை

தினத்தந்தி
|
24 Jun 2022 2:34 PM IST

வண்டலூர் அருகே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள ஓட்டேரி விரிவு பகுதி 8-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 47), இவர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்தார். ஷேர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்