< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சட்டப்படி சந்திப்போம்: ஐ.டி ரெய்டு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து
|3 Nov 2023 12:39 PM IST
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கையெழுத்தைப் பெற்றார்.
சென்னை,
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து அவர்களிடம் கையெழுத்தைப் பெற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; "நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன். மத்தியில் ஆளும் பாஜகவின் அணிகளாக ஐ.டி, இ.டி போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளன. இவற்றை எல்லாம் சட்டப்படி சந்திப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.