< Back
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினர் ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினர் ஆய்வு

தினத்தந்தி
|
20 Feb 2023 12:15 AM IST

பண்ருட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை எடை போடுவது முதல், அதை விற்பனை செய்வது வரை அங்கிருந்து அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் பண்ருட்டி அருகே சேமக்கோட்டை நத்தம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகளிடம் அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா? என்று கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்