< Back
மாநில செய்திகள்
மதுரை ரெயில் தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை
மாநில செய்திகள்

மதுரை ரெயில் தீ விபத்து தொடர்பாக தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை

தினத்தந்தி
|
27 Aug 2023 12:36 PM IST

ரெயில் விபத்து நடைபெற்றபோது, அதில் இருந்த தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.

மதுரை,

மதுரை அருகே நேற்று சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். சமையல் செய்வதற்காக ரெயிலின் உள்ளே அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த 9 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிரிழந்தோரின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெயில் தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ரெயில் விபத்து நடைபெற்றபோது, அதில் இருந்த தனியார் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தப்பியோடிய 5 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர். பிடிபட்ட 5 பேரும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் முன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விபத்து தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்