< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கொலை: சேலம் சரக டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
|25 Oct 2023 1:00 AM IST
அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் காந்தம்மாள் (வயது 70). திருமணம் ஆகாத இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காந்தம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அரைப்பவுன் நகைக்காக மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை நெரிந்து படுகொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஓடசல்பட்டி கூட்ரோடுக்கு நேரில் சென்று மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை பார்வையிட்டு கொலை குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.