கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம்
|கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மற்றும் முதல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊரக பகுதிகள், 3 நகர்புற பகுதிகளுக்கு என மொத்தம் 12 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து தோ்வு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களுக்கும் மாவட்ட திட்டக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் பதவிபிரமானம் செய்து வைத்து பேசுகையில், மாவட்ட முழுமைக்கான வரைவு வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும். ஊரக மற்றும் நகர்புறங்களில் நீர்வளம் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பாதுகாத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு திட்டக்குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் முரளிதரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார் மற்றும் மாவட்ட முதன்மை நிலை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.