< Back
தமிழக செய்திகள்

கரூர்
தமிழக செய்திகள்
வாகனத்தின் பதிவெண்ணை துல்லியமாக கண்டறியும் கேமரா அறிமுகம்

7 Sept 2022 11:53 PM IST
வாகனத்தின் பதிவெண்ணை துல்லியமாக கண்டறியும் கேமரா அறிமுகம் செய்யப்பட்டது.
கரூாில் வாகனத்தின் பதிவெண்ணை துல்லியமாக கண்டறியும் மற்றும் வாகனத்தின் வேகத்தை துல்லியமாக அளவிடும் திறன் கொண்ட ஏ.என்.பி.ஆர். கேமராவை (தானியங்கி எண் தகடு அங்கீகார கேமரா) கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனம் நேற்று தொடங்கி வைத்தார். இதே போல கரூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள், மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் கரூர் மாநகரம் போன்ற இடங்களில் ஏ.என்.பி.ஆர்.கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.