பெரம்பலூர்
விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க புதிய செயலி அறிமுகம்
|விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் இனி வரும் காலங்களில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கு பெறவும், விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும் மற்றும் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியான TNSPORTS- APP ஆடுகளம் மற்றும் tnsports.org.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும். இந்த செயலியை விளையாட்டு வீரர்கள், இ-மெயில் முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்த வீரர்களுக்கு மட்டுமே டிஜி லாக்கர் மூலம் வழங்கப்படவுள்ளது. எனவே பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் TNSPORTS- APP ஆடுகளம் செயலியில் விரைவாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.