< Back
மாநில செய்திகள்
போதையில் சாலையின் நடுவே படுத்து குடிமகன் அலப்பறை - போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

போதையில் சாலையின் நடுவே படுத்து குடிமகன் அலப்பறை - போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
15 July 2023 1:30 PM IST

திருத்தணி-அரக்கோணம் சாலையில் போதையில் சாலையின் நடுவே படுத்து குடிமகன் அலப்பறையில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி-அரக்கோணம் சாலையில் நேற்று மாலை குடிபோதையில் ஒருவர் சாலையில் நடுவே படுத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள், பஸ் மற்றும் லாரிகளை வழிமறித்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மதுபோதையில் இருந்தவரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் திருத்தணி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்