< Back
மாநில செய்திகள்
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல்; 5 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல்; 5 பேர் கைது

தினத்தந்தி
|
11 Sept 2023 2:42 AM IST

பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் பார்த்திபனூர் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 56). இவர் அங்கு வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதி திருச்சி பாலக்கரை பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் வந்தார். அப்போது அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் அங்கு மணல்வாரித்துறை ரோட்டில் சிலர் பட்டாசு வெடித்தனர். இதைக்கண்ட கருணாகரன் அவர்களை சற்று தள்ளிச்சென்று பட்டாசு வெடிக்கும்படி கூறினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கருணாகரனை தாக்கி, பயங்கர ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கருணாகரன் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் விசாரணை நடத்தி, பாலக்கரை பசுமடத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (29), சாந்தகுமார் (27), காஜாபேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் (29), சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த அன்சாரி (29), காஜாபேட்டையை சேர்ந்த மதுகுமார் (33) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்