< Back
தமிழக செய்திகள்

கோயம்புத்தூர்
தமிழக செய்திகள்
நில விவகாரத்தில் மிரட்டல்

24 Sept 2023 1:00 AM IST
நில விவகாரத்தில் மிரட்டல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை வெள்ளலூர் பூமிநாதன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் நாராயணி (வயது54). இவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- உலகநாயக்கர் தோட்டம் பகுதியில் எனது கணவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தவர்கள், அதில் குடோன் வைத்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த இடத்தை காலி செய்யாமல், நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். மிரட்டல் விடுக்கின்றனர் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.