< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே வாலிபரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் பறிப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே வாலிபரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
2 Jun 2022 6:30 PM IST

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே வாலிபரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் டிபன்ஸ் காலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 26), இவர் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து ெரயில் மூலம் கூடுவாஞ்சேரி வந்தார். பின்னர் ெரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன், ரூ.400-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றனது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் மகேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்