தஞ்சாவூர்
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேட்டி
|உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவிலை சேர்க்க பரிந்துரை செய்வேன் என தஞ்சையில், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கூறினார்.
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவிலை சேர்க்க பரிந்துரை செய்வேன் என தஞ்சையில், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கூறினார்.
இல.கணேசன் பேட்டி
தஞ்சை பெரியகோவிலுக்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் நேற்றுகாலை வந்தார். அவரை கலெக்டர் தீபக் ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் கோவிலுக்குள் சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக அதிசய பட்டியல்
நான் தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் தஞ்சை பெரியகோவிலுக்கு பல முறை சென்று தரிசனம் செய்துள்ளேன். தஞ்சை பெரியகோவிலின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் ஆன்மிகத்தையும், தேசியத்தையும் நம்பக்கூடியவன். தஞ்சை பெரியகோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது குறித்து அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேட்டுப்பார்க்கிறேன். இது தொடர்பாக எனது தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்டால் அதற்கும் பதில் கூறுவேன். உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவிலை சேர்க்க நானும் பரிந்துரை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.