தஞ்சாவூர்
அர்ஜூன் சம்பத் பேட்டி
|விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறினார்.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில் சன்னதி தெருவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார்.
51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில்
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்திலேயே முதன்முதலாக கும்பகோணத்தில் சனாதன தர்மம் காக்கும் மற்றும் செங்கோல் ஆட்சி பரிபாலனம் என இரட்டை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா ஆன்மிக மற்றும் தேசிய விழாவாகும். அந்த பகுதிகளுக்கு ஏற்ப 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை வழிபாடு செய்து ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிக்கலில் சிக்க வைக்க முயற்சி
இந்த ஆண்டு சனாதனத்தை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை சிக்கலில் சிக்க வைப்பதற்கு ஆட்சி செய்பவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒழித்துக்கட்ட அனுமதிக்க மாட்டோம்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.