< Back
மாநில செய்திகள்
தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் விசாரணை

தினத்தந்தி
|
23 Oct 2022 1:15 AM IST

ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருட்டு தொடர்பாக தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கன்னங்குறிச்சி:-

கன்னங்குறிச்சி சாய்பாபா நகரில் வசிப்பவர் சண்முகம். ஜோலார்பேட்டையில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ஆகியன திருட்டு போனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசோதிப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய நகைகளை தமிழ்செல்வி, தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை விற்று விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்