விழுப்புரம்
244 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு
|விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 244 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கானஅனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
விழுப்புரம்
நேர்முகத்தேர்வு
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களின் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 244 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.
அனுமதிச்சீட்டு
இத்தேர்வானது வருகிற 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை விழுப்புரம் கப்பியாம்புலியூரில் உள்ள ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்(அனுமதிச்சீட்டு) விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழியாக (www.drbvpm.in/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் உதவிக்கான குழுவின் பிரத்யேக தொலைபேசி எண்ணான 04146- 229854 என்ற எண்ணிலோ அல்லது drpdsvpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி தெரிவித்துள்ளார்.