< Back
மாநில செய்திகள்
தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும் என சீமான் பேட்டி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும் என சீமான் பேட்டி

தினத்தந்தி
|
22 Oct 2023 1:00 AM IST

தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும் என பர்கூரில் சீமான் தெரிவித்தார்.

பர்கூர்:

தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும் என பர்கூரில் சீமான் தெரிவித்தார்.

சரியாக இல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்து வருகிறது. நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும்போது பிற கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவில் அதிகாரிகள் நியமனம் சரியாக இல்லை. நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என தெரிவிக்கிறது. முதலில் நீதிமன்றம் எதில் தலையிட முடியும், முடியாது என்கிற பட்டியலை வெளியிட வேண்டும்.

பறிகொடுத்தது தி.மு.க. தான்

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்கிற அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தேர்வை எழுத சொல்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர்ந்தால் அது அரசின் கொள்கை முடிவு தலையிட முடியாது என நீதிமன்றம் கூறுகிறது. காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறி இருக்க வேண்டும். கர்நாடகா அரசு அந்த மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும்போது, தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்து விட்டார்.

மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், மின் வினியோகம், சாலை பராமரித்தல், கல்விக்கொள்கை உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்தது தி.மு.க. தான். நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது நாங்கள் தேர்தலுக்கான முன் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்