< Back
மாநில செய்திகள்
அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு

தினத்தந்தி
|
22 Jun 2023 12:46 AM IST

அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

அரியலூரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்றம், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அட்வகேட் அசோசியேசன் ஆகியவற்றின் சார்பில் 9-வது சர்வதேச யோகா தினம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கிறிஸ்டோபர் தலைமையில் நடந்த சர்வதேச யோகா தினத்தில் யோகா பயிற்சியினை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் அரசு உதவி மருத்துவர் முத்துகுமார் அளித்தார். இதில் ஏனைய நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

மேலும் செய்திகள்