< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
சர்வதேச யோகா தின விழா
|24 Jun 2023 12:15 AM IST
சர்வதேச யோகா தின விழா பள்ளியில் நடைபெற்றது
காரைக்குடி
காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் முதல்வர் உஷா குமாரி தலைமை தாங்கினார். பள்ளியின் சேர்மன் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காட்டினர். யோகா தொடர்பான வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருண்குமார், துணை முதல்வர் பிரேம்சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.