சிவகங்கை
சர்வதேச யோகா தின விழா
|சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
காரைக்குடி
சர்வதேச யோகா தினத்தையொட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமையில் பதிவாளர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட யோகா போட்டி நடைபெற்றது. மாணவர்கள் 50 வகையான யோகாசனங்களை செய்து காட்டினார். நிகழ்ச்சியை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன் ஏற்பாடு செய்திருந்தார். ராஜராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் ராஜராஜன் கல்வி குழுமங்கள் மத்திய அரசின் ஆயுஷ் பன்னாட்டு இயற்கை மருத்துவ முகமை, மகரிஷித் சாந்தாமணி அறக்கட்டளை ஆகியவை இணைந்து யோகா தினத்தினை கொண்டாடியது. நிகழ்ச்சியினை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தொடங்கி வைத்தார். கோவிலூர் உடற்கல்வி பேராசிரியர் ரஞ்சித் சூரிய நமஸ்காரம் கோவிலூர் உடற்கல்வி ஆசிரியர் ஆசனங்களை செய்து காட்டினார்.
வித்யா கிரி கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் சுவாமிநாதன் தலைமையில் வித்யாகிரி கல்விக்குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா முன்னிலையில் மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவிலூர் அரசு கலை கல்லூரியில் முதல்வர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கி பேசினார்.