< Back
மாநில செய்திகள்
வருமானவரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு - முதன்மை கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்பு
சென்னை
மாநில செய்திகள்

வருமானவரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு - முதன்மை கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்பு

தினத்தந்தி
|
22 Jun 2022 12:07 PM IST

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் முதன்மை கமிஷனர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை கமிஷனர் ரா.ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 350 பேர் பங்கேற்றனர். யோகா ஆசிரியர் விக்ரம் சீனிவாசன் யோகா அமர்வை நடத்தினார். கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, ஊட்டி, ஓசூர், பொள்ளாச்சி, வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல், கும்பகோணம், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் மற்றும் பெரம்பலூர் உள்பட 26 இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் இதே போன்ற நிகழ்வுகள் வருமான வரித்துறை சார்பாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி 2022-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையின் 1,050 அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை எழும்பூரில் ரெயில்வே போலீசார் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா மற்றும் டி.ஐ.ஜி. அபிஷேக் தீக்சித் உத்தரவின் பேரில் யோகா பயிற்சிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை காவல் மாவட்டத்தின் சார்பாக ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் பெண் போலீசாருக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்