< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
சர்வதேச யோகா தினம்
|23 Jun 2023 12:30 AM IST
சாயல்குடியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சாயல்குடி,
சாயல்குடியில் தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். முதல்வர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் யோகா பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார். பள்ளி மாணவ- மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.