< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
5 March 2024 8:54 PM IST

சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 8-ந்தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், வருகின்ற 8.3.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், "சர்வதேச மகளிர் தினம்" கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

கழக மகளிர் அணியின் சார்பில் நடைபெற உள்ள சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கழக மகளிர் அணியில் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், செயல் வீராங்கனைகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்