< Back
மாநில செய்திகள்
உலக மகளிர் தின விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

உலக மகளிர் தின விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

தினத்தந்தி
|
9 March 2023 11:59 PM IST

விராலிமலையில் உலக மகளிர் தின விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

விராலிமலையில் ஐ.டி.சி. தனியார் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தின விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் கலந்து கொண்ட இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நிறுவனத்தின் முகப்பில் இருந்து தொழிற்சாலை வளாக மேலாளர் சரவணன் தொடங்கி வைத்தார். மனித வள மேம்பாட்டு பிரிவு தலைமை மேலாளர் பத்மநாபன், மேலாளர்கள் மோகன்ராஜ், சந்திரகிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 10 மணியளவில் தொழிற்சாலையில் இருந்து புறப்பட்ட பேரணியானது விராலிமலை, மலைக்குடிப்பட்டி வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு அவர்களை பள்ளி மாணவிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். இதில் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி கலந்து கொண்டு குடும்பம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து நிறுவனத்தின் பணிப்பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முடிவில் ஐ.டி.சி. நிறுவன பணியாளர் அபிராமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்