< Back
மாநில செய்திகள்
தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு

தினத்தந்தி
|
21 Oct 2023 10:45 PM IST

வாணியம்பாடியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி மருதர் கேசரி மகளிர் கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறை மற்றும் சர்வதேச தமிழ் ஆய்விதழ் இணைந்து 'தமிழ் இலக்கிய மரபு' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில், திருவள்ளுவர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பாமா, இணைய வழி வாயிலாக சர்வதேச தமிழ் ஆய்விதழ் முதன்மை ஆசிரியர் சுரேஷ், இலங்கை கிழக்கு பல்கலைக்கழக கலைப்பண்பாட்டு பீடாதிபதி கலாநிதி, குணா பாலசிங்கம் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

கல்லூரி முதல்வர் இன்பவள்ளி, மக்கள் தொடர்பாளர் சக்திமாலா, ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்த்துறை தலைவர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் கலெக்டர் பேசுகையில், மனிதர்களாகிய நாம் நம்முடைய பல்வேறு பிளவுகளை கொண்டு வாழ்ந்து வருகிறோம். இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. நல்ல நூல்களை தேடி படியுங்கள். வள்ளலார் உலகுக்கு எடுத்துக் கூறிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அனைவரும் பின்பற்றி உலக உயிர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்றார்.

கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்