விருதுநகர்
சிவகாசியில் சர்வதேச கருத்தரங்கு
|சிவகாசியில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து மின் கற்றலுக்கான கல்வி ஊடக தயாரிப்பு என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மின் கற்றல் பற்றி பல்வேறு தலைப்புகளின் கீழ் மெக்சிகோ, நேபாளம், பூடான், ஓமன் எத்தியோப்பியா, வியட்நாம், உஸ்பெக்கிஸ்த்தான், தான்சானியா, தஜிகிஸ்தான், பெரு, நைஜீரியா, மாலி, கென்யா, ஈராக், கானா, இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழும இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். டீன் மாரிச்சாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ரேணுகாதேவி, மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் சீனிவாசன் பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்த காலகட்டத்தில் மாணவர்களின் கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க மின் வழிகற்றல் கற்பித்தல் முறை உலக முழுவதும் பிரபலம் அடைந்தது. ஒவ்வொரு நாடுகளும் அவர்களுடைய கல்வித்துறைக்கு ஏற்றவாறு மின் வழி கற்றலை சிறிது, சிறிதாக நடைமுறைப்படுத்தி வந்தனர். தற்போது மின் வழி கற்றல் அபார வளர்ச்சியடைந்து உலகில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.
இக்கருத்தரங்கிற்கு உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பெறப்பட்டு 50 ஆராய்ச்சிக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் மின் கற்றல் தொடர்பான தலைப்புகளில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரியின் பேராசிரியர்கள் மோகமீனா, ஜெயமாலா, அனிதா ஆகியோர்கள் கருத்தரங்கில் நடுவர்களாக பங்கேற்றனர். முடிவில் பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.