< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் சர்வதேச தினை ஆண்டு விழா
|7 Aug 2023 12:30 AM IST
அரசு பள்ளியில் சர்வதேச தினை ஆண்டு விழா நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள இடைக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச தினை ஆண்டு விழா நடைபெற்றது. கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் வேளாண்துறை மாணவிகள் விஜயலெட்சுமி, அன்ஷிகா, தனலட்சுமி, தேவிகா ரபிஜு, ஸ்ரீ நந்தினி, ஏஞ்சல், வர்கீஸ், மினுமோல், பாரத லட்சுமி, லில்லி ஜாய்ஸ் ஆகியோர் வேளாண்மை உதவி இயக்குனர் மதிவாணன், பாட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, குழு ஆலோசகர் முத்துலெட்சுமி ஆகியோரின் ஆலோசனையின் படி இந்த விழாவை நடத்தினர். இதில் மாணவர்களுக்கு தினையின் முக்கியதுவம் குறித்தும், அதன் சுகாதார நலன்கள் குறித்தும் உரையாடினர். இதனையடுத்து மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.