< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டி; தங்கம் வென்ற ஜோலார்பேட்டை அரசு பள்ளி மாணவர்
|3 Aug 2022 3:04 PM IST
இறுதிச்சுற்றில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவரை வீழ்த்தி, தனுஷ் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் தனுஷ். இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.
இதன் இறுதிச்சுற்றில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவரை வீழ்த்தி, தனுஷ் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். தங்கம் வென்ற மாணவர் தனுஷுக்கு ஜோலார்பேட்டை மக்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.