< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
|4 Dec 2022 12:33 AM IST
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பொம்மி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டு 186 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 95 ஆயிரத்து 324 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நான்கு வகையான திருமண உதவித்திட்டத்தின் கீழ் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கமும் வழங்கினர். விழாவில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது குறிப்பிடத்தக்கது.