< Back
மாநில செய்திகள்
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
மாநில செய்திகள்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி

தினத்தந்தி
|
7 April 2024 7:35 PM IST

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூடுதல் ஒன்றை சேர்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும். சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்