< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த சர்வதேச மாநாடு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த சர்வதேச மாநாடு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

தினத்தந்தி
|
12 Dec 2023 11:08 PM IST

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் ‘பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்' என்ற தலைப்பில் சென்னையில் சர்வதேச மாநாடு நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் 'பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்' என்ற தலைப்பில் சென்னையில் சர்வதேச மாநாடு நடந்தது.

மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி வரவேற்றார். மாநாட்டில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் மகளிர் குறித்த திட்டங்கள், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய செயல்பாடுகள் மற்றும் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த திட்ட விளக்கப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

பெண்களை முன்னேற்றுவதற்கான தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய செயல் திட்டங்கள் என்ற புத்தகத்தை சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டார். 'பெண்ணே இதோ உன் சட்ட உரிமைகள்' என்ற புத்தகத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டார்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பவானி சுப்பராயன், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

மாநாட்டில் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் செயலர் வே. அமுதவல்லி மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

உலகளவில் பெண்கள் தினந்தோறும் எதிர் கொள்ளும் வன்முறைகள், அதனை தடுக்கும் முறைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்