திண்டுக்கல்
பன்னாட்டு கருத்தரங்கம்
|திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, மதுரை போதி ஆய்விதழ் மற்றும் நாகாலாந்து மாநில கோஹிமா ஓரியண்டல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு கல்லூரி செயலர் அருள்தேவி தலைமை தாங்கினார். முதல்வர் மேரி பிரமிளா சாந்தி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இதில் ஜெர்மனி நாட்டின் கெயில் கிறிஸ்டியன் அல் பிராட்ஸ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கண்ணன் நாராயணன், லண்டன் ஹியூமானிடேரியன் அமைப்பின் இயக்குனர் பரின் சோமணி, திருச்சி பிஷப் கல்லூரி தலைமை இணை பேராசிரியர் சுரேஷ் பிரடரிக் உள்பட பல்வேறு கல்லூரிகளின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் மதுரை, வேலூர், கன்னியாகுமரி, கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருத்தரங்க ஆய்வாளர்களாக பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று 250-க்கும் மேற்பட்டோர் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கை நடத்த சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை, கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் வனிதா ஜெயராணி செய்திருந்தார்.