< Back
மாநில செய்திகள்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள்

தினத்தந்தி
|
20 Dec 2022 10:58 PM IST

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான 19-வது தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 34 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும், 25 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளும் என 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்பட மாணவர்களுக்கு 23 வகையான போட்டிகளும், மாணவிகளுக்கு 23 வகையான போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளை திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் ரா.விஜயராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ராஜமாணிக்கம், வரலட்சுமி, வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு, யோகலட்சுமி மற்றும் கல்லூரி உடற்கல்வி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு இன்று (புதன்கிழமை) மாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்