< Back
மாநில செய்திகள்
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
மாநில செய்திகள்

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

தினத்தந்தி
|
14 Sept 2023 10:53 AM IST

டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் 3000-ம் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

தமிழகத்தின் சில மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமெடுத்து வருகிறது. கடலூரில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. திருவாரூர், திருவண்ணாமலையிலும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் டெங்குவுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், காய்ச்சல் வந்தால் வீட்டிலேயே இல்லாமல் முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், கட்டுமானப் பணிகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுவதாகவும் கூறிய அவர், இது தொடர்பாக கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்