< Back
மாநில செய்திகள்
காரைக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

தினத்தந்தி
|
25 Jan 2023 12:15 AM IST

காரைக்குடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

காரைக்குடி,

நாட்டின் குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், மக்கள் கூடும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி காரைக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ரெயில்வே போலீசார் ரெயில்களில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் ரெயில் பயணத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ரெயில்நிலையத்தின் வெளியே நின்ற ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர்.

மேலும் செய்திகள்