< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
தீவிர தூய்மை பணி முகாம்
|5 Oct 2023 12:15 AM IST
சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பாரதம்-தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் 15-வார்டுகளிலும் தீவிர தூய்மைபணிகள் முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். தலைவர் ரோஜா ரமணிதாகப்பிள்ளை துய்மைப்பணியை தொடங்கி வைத்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.