< Back
மாநில செய்திகள்
தீவிர தூய்மை பணி இயக்கம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தீவிர தூய்மை பணி இயக்கம்

தினத்தந்தி
|
28 May 2023 12:15 AM IST

தீவிர தூய்மை பணி இயக்கம்


விருதுநகர் நகராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி தீவிரத் தூய்மை பணி இயக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மணி தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். மேலும் நகரில் பிற பகுதிகளிலும் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்